உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை உபரிநீர் குறைப்பு

மேட்டூர் அணை உபரிநீர் குறைப்பு

மேட்டூர், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 35,687 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., அணை நீர்திறப்பு, நேற்று, 15,941 கனஅடியாகவும், வினாடிக்கு, 12,000 கனஅடியாக இருந்த கபினி நீர் திறப்பு, நேற்று, 5,729 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. இதன்மூலம் இரு அணைகளில் இருந்து, வினாடிக்கு, 21,670 கனஅடி உபரிநீர் மட்டும் காவிரியாற்றில் திறக்கப்பட்டது.இதற்கேற்ப நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, வினாடிக்கு, 56,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று காலை, 8:00 மணிக்கு, 35,500 கன அடி, மாலை, 4:00 மணிக்கு, 35,000 கனஅடியாக சரிந்தது. இதனால் காலையில் வினாடிக்கு, 12,500 கனஅடியாக இருந்த அணை உபரி நீர் திறப்பு, மாலையில், 8,500 கன அடியாக குறைக்கப்பட்டது. அணை மின் நிலையங்கள் வழியே, டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 22,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை