உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்வரத்து 80 கன அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து 80 கன அடியாக சரிவு

மேட்டூர் : மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. மேட்டூர் அணை சுற்றுப்பகுதிகளில் இரு மாதங்களில், 18 நாட்கள் பரவலாக மழை பெய்தது. எனினும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழையின்றி மேட்டூர் அணை நீர்வரத்து கடந்த டிசம்பர் வரை, 4 இலக்கமாகவும், ஜனவரி முதல், 3 இலக்கமாகவும், கடந்த ஏப்ரல், மே மாதங்களில், 2, ஒற்றை இலக்கம் என சரிந்தது.குறிப்பாக கடந்த ஏப்., 3ல் அணைக்கு வினாடிக்கு, 5 கனஅடி நீர் என, ஒற்றை இலக்கில் நீர்வரத்து இருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 114 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 80 கனஅடியாக சரிந்தது. கடந்த, 11ல், 14.08 டி.எம்.சி.,யாக இருந்த அணை நீர் இருப்பு, 12ல், 13.97 டி.எம்.சி., நேற்று, 12.96 டி.எம்.சி.,யாக சரிந்தது. நேற்று முன்தினம், 41.91 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 41.66 அடியாக குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ