மேட்டூர் அணை நீர்வரத்து 29,540 கனஅடியாக உயர்வு
மேட்டூர்;மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த மாதம், 10 காலை, 120 அடியாக இருந்த அணை நீர்மட்டம், மாலை, 119.89 அடியாக சரிந்தது. பின் நீர்வரத்து குறைந்த நிலையில் பாசன நீர்திறப்பு அதிகரித்ததால், அணை நீர்மட்டம் படிப்படியாக சரியத்தொடங்கியது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம், 111.48 அடியாக சரிந்தது.இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,033 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 29,540 கனஅடியாக அதிகரித்தது. வினாடிக்கு, 12,500 கனஅடி நீர், பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது. திறப்பை விட வரத்து கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 111.48 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 112.48 அடியாக அதிகரித்தது. கடந்த மாதம், 10 முதல், படிப்படியாக சரியத்தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம், ஒரு மாதத்துக்கு பின், நேற்று, 1 அடி அதிகரித்தது.