மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்று நாளில் 3 அடி உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம்மூன்று நாளில் 3 அடி உயர்வுமேட்டூர், அக். 17-மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த மூன்று நாட்களில், 3 அடி உயர்ந்துள்ளது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 13ல் அணை நீர்மட்டம், 89.26 அடியாக சரிந்தது. தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடைந்தது. இதனால், மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த, 12ல், 4,938 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, 13ல், 6,445 கனஅடியாகவும், 14ல், 17,596 கனஅடியாகவும் அதிகரித்தது. நேற்று முன்தினம், 15,531 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 16,196 கனஅடியாக உயர்ந்தது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், நேற்று முன்தினம் மேட்டூர் அணை நீர்திறப்பு, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.நீர் திறப்பை விட, வரத்து கூடுதலாக இருந்ததால் கடந்த, 13ல், 89.26 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 92 அடியாகவும், 51.81 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 54.96 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது. கடந்த மூன்று நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம், 3 அடியும், நீர் இருப்பு, 3 டி.எம்.சி.,யும் அதிகரித்துள்ளது.