மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்வரத்து 29,021 கன அடியாக உயர்வு
04-Dec-2024
மேட்டூர்: மேட்டூர் அணை நீர் இருப்பு, 53 நாட்களில், 31 டி.எம்.சி., உயர்ந்-துள்ளதால், விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூலை, 30ல், அணை நிரம்பியது. பின் நீர்வரத்து குறைந்த நிலையில் டெல்டா நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் கடந்த அக்., 12ல் நீர்-மட்டம், 89 அடி, நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,யாக சரிந்த நிலையில், நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 9,246 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, இரவு, 8:00 மணிக்கு, 29,021 கனஅடியாகவும், நேற்று காலை, 8:00 மணிக்கு, 32,240 கனஅடியாகவும் அதிகரித்-தது. இரு வாரங்களாக அணையில் இருந்து டெல்டா பாசனத்-துக்கு வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்-டது. வரத்தை விட திறப்பு குறைவால், நேற்று காலை அணை நீர்-மட்டம், 113.21 அடி, நீர் இருப்பு, 83.05 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. கடந்த, 53 நாட்களில் அணை நீர்மட்டம், 24 அடி, நீர் இருப்பு, 31 டி.எம்.சி., உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும், 10 டி.எம்.சி., மட்டும் தேவை. நீர்வரத்து, திறப்பில் இதேநிலை நீடித்தால், 4 நாட்களில் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்புள்ளது.துணை ஆறுகள்தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பிலிகுண்டுலுவில், மத்திய நீர் ஆணைய அளவீடு மையம் உள்ளது. அங்கு கர்நாடகா அணை-களில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வரும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. பிலிகுண்டுலு கீழ் பகுதியில் தர்மபுரி மாவட்-டத்தில் நீர்பிடிப்பு பகுதியை கொண்ட சின்னாறு, கேசரிகளி-குள்ளா ஆறுகள், ஒகேனக்கல் அருகே காவிரியில் கலக்கிறது. அது-போன்று தமிழகம் - கர்நாடகா எல்லையில் உற்பத்தியாகும் பாலாறு, தர்மபுரி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியை கொண்ட நாகாவதி, தொப்பையாறு ஆகிய துணை ஆறுகளும் காவிரியில் கலக்கிறது.'பெஞ்சல்' புயலால் சின்னாறு, கேசரிகளிகுள்ளா, பாலாறு, நாகா-வதி, தொப்பையாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நீர், இரு நாட்களாக காவிரியில் கலக்கிறது. அதற்கேற்ப நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 9,246 கனஅடியாக இருந்த காவிரி நீர்வரத்து, நேற்று காலை, 32,240 கனஅடியாக அதி-கரித்து, மேட்டூர் அணையை சென்றடைந்தது. நேற்று தர்மபுரி மாவட்டத்தில் மழை குறைந்ததால் காவிரி துணையாறுகளில் நீர்-வரத்து குறைந்துள்ளது. அதற்கேற்ப வரும் நாட்களில் காவிரியில் நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளது.
04-Dec-2024