மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு
11-Dec-2024
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், நான்கு நாட்களுக்கு பின்பு ஒரு அடி உயர்ந்தது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழககர்நாடகா எல்லையிலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரம் அடைந்த மழையால், நேற்று மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 7,148 கனஅடியாக இருந்தது.வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது. நீர்வரத்து கூடுதலாக இருந்ததால் கடந்த, 12ல், 117.04 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நான்கு நாட்களுக்கு பின்பு நேற்று, 118.21 அடியாக உயர்ந்தது.அணை நீர் இருப்பு, 90.64 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நிரம்ப இன்னும், 2 அடி, 3 டி.எம்.சி., நீர் தேவை. நீர்வரத்து, திறப்பில் இதே நிலை நீடித்தால், ஆறு நாட்களுக்கு பின்பு மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.
11-Dec-2024