மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 118.21 அடியாக அதிகரிப்பு
17-Dec-2024
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து, நேற்று முன்தினம், 118.21 அடியாக உயர்ந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு, 7,368 கனஅடி நீர் வந்தது. குடிநீர், பாசனத்துக்கு, 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம், 118.53 அடியாகவும், நீர் இருப்பு, 91.14 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது. அணை நிரம்ப இன்னும் நீர்மட்டம், 1.5 அடி, நீர் இருப்பு, 2 டி.எம்.சி., மட்டும் தேவை என்பதால், விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.
17-Dec-2024