உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு 100 அடியை எட்டுமா மேட்டூர் அணை

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு 100 அடியை எட்டுமா மேட்டூர் அணை

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து தொடர்ந்து, 18,000 கனஅடிக்கு மேல் நீடிப்பதால், அணை நீர்மட்டம், 100 அடியை எட்ட வாய்ப்புள்-ளது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூலை 27 ல், 99.11 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நீர்வரத்து அதிகரிப்பால், 28ல், 100.41 அடியாக உயர்ந்தது.கடந்த ஜூலை 30ல், 120 அடியாக உயர்ந்த நீர்மட்டம் டெல்டா பாசன நீர் திறப்பு அதிகரிப்பால் ஆக.21ல், 119 அடியாக சரிந்தது. தொடர்ந்து நீர்மட்டம் கடந்த, 13ல், 89.26 அடியாக சரிந்தது. மீண்டும் தமிழக-கர்நாடகா எல்லை காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடைந்ததால் கடந்த, 14ல் நீர்வரத்து, 17,596 கனஅ-டியாக அதிகரித்தது. அதன் பின் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்தது. நேற்று நீர்மட்டம், 97.89 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 18,094 கனஅடி நீர் வந்து கொண்டிருந்து. கடந்த சில நாட்களாக அணைக்கு வினாடிக்கு, 15,000 கனஅடி நீருக்கு மேல் வருகிறது. காவிரி டெல்டா மாவட்-டங்களில் பரவலாக மழை பெய்வதால், நேற்று வினாடிக்கு, 3,000 கனஅடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 100 அடியை எட்ட இன்னமும், 2 அடி, 2.5 டி.எம்.சி., நீர் தேவை. நீர்வரத்து, நீர்திறப்பில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் இரண்டரை மாதங்களுக்கு பின்பு மீண்டும், 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !