மேலும் செய்திகள்
மீண்டும் சரிய தொடங்கிய மேட்டூர் அணை நீர்மட்டம்
01-Nov-2024
மேட்டூர்: மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழக-கர்நாடகா எல்லையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்தது. இதனால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 8,099 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 7,325 கனஅடியாகவும், 108.22 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 107.88 அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணை நீர்வரத்தை விட, திறப்பு கூடுதலாக இருந்ததால் நீர்மட்டம், மூன்று நாட்களாக சரிய துவங்கியுள்ளது.
01-Nov-2024