16,500 கன அடியாக மேட்டூர் நீர்வரத்து நீடிப்பு
மேட்டூர், Lமேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் மதியம், வினாடிக்கு, 20,500 கன அடியாக இருந்த அணை நீர்வரத்து, இரவு, 10:00 மணிக்கு, 16,500 கனஅடியாக குறைந்தது. நேற்று காலை முதல் மாலை வரை, நீர்வரத்தில் அதே நிலை நீடித்தது. அணையில் இருந்து மின் நிலையங்கள் வழியே வினாடிக்கு, 16,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு, 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, உபரி நீர் வெளியேற்றும், 16 கண் மதகு மூடப்பட்டதால் ஷட்டர்கள் வழியே கசிவுநீர் மட்டும் வெளியேறியது. இதனால் மதகில், ஆங்காங்கே தேங்கி நின்ற தண்ணீரில், மீனவர்கள் மீன் பிடித்தனர்.