உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் நீர்வரத்து 4 நாட்களாக இறங்கு முகம்

மேட்டூர் நீர்வரத்து 4 நாட்களாக இறங்கு முகம்

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, கடந்த நான்கு நாட்களாக படிப்படி-யாக சரிந்து வருகிறது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழக - கர் நா-டகா எல்லையிலுள்ள, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் படிப்படியாக குறைந்தது. அதற்கேற்ப கடந்த, 7ல், 11,063 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 8ல், 9,466 கன-அடி, 9ல், 9,149 கனஅடி, நேற்று முன்தினம், 7,862 கனஅடி, நேற்று 5,790 கனஅடியாக சரிந்தது.அணையில் இருந்து வினாடிக்கு, 8,000 கனஅடி நீர் பாசனத்-துக்கு திறக்கப்படுகிறது. நீர் திறப்பை விட வரத்து குறைந்ததால் நேற்று முன்தினம், 106.53 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 106.34 அடியாக சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை