உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழாய் உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்

குழாய் உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர், தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் இருந்து காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில், தினமும், 2.6 கோடி லிட்டர் எடுத்து, ஓமலுார், காடையாம்பட்டி பகுதி கிராமங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை, 8:30 மணிக்கு, மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே, இடைப்பாடி செல்லும் சாலை பிரிவில், காடையாம்பட்டி திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர், 20 அடி உயரத்துக்கு பீறிட்டு அடித்து வீணானது. வடிகால் வாரிய அலுவலர்கள் குடிநீரை நிறுத்தியதால், ஒரு மணி நேரத்துக்கு பின், வெளியேறிய குடிநீர் படிப்படியாக குறைந்து நின்றது. பின் ஊழியர்கள் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மதியம், 2:00 மணிக்கு உடைப்பை சரிசெய்த பின், மீண்டும் குடிநீர் வினியோகம் தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை