சென்னையில் மினி மாரத்தான் கூட்டுறவுத்துறை அழைப்பு
சேலம்: தமிழக கூட்டுறவுத்துறை சார்பில், 'சமத்துவம் கூட்டுறவின் மகத்-துவம்; கூடுவோம், ஓடுவோம், கூட்டுறவால் உலகை வெல்வோம்' எனும் கருப்பொருளை மையமாக வைத்து, 'ஒருவ-ருக்காக எல்லோரும் ஓடுவோம்; எல்லோரும் ஓடி கூட்டு உறவாகுவோம்' தலைப்பில் மினி மாரத்தான் போட்டி நடக்க உள்ளது.சர்வதேச கூட்டுறவு ஆண்டு - 2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை, தீவுத்திடலில் ஜூலை, 6 மாலை, 5:30 மணிக்கு, இப்போட்டி நடக்க உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், இப்போட்டியில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறார். தீவுத் திடலில் தொடங்கும் போட்டி, சுவாமி சிவானந்தா சாலை, மன்றோ சிலை வழியே சென்று, மீண்டும் தீவுத்திடலில் முடியும். இருபாலரும் பங்கேற்கலாம்.இதற்கு வயது வரம்பு, 18 முதல், -40; 40 மற்றும் அதற்கு மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் முறையே, 30,000, 20,000- 10,000 ரூபாய் வழங்-கப்படும். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே பரிசுகள் வழங்-கப்படும்.ஒற்றுமை திருவிழாவில் பங்கேற்க நுழைவு கட்டணமாக, 100 ரூபாய் செலுத்த வேண்டும். விபரங்களுக்கு, -97909 54671 என்ற எண்ணில் பேசலாம். gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம்.