உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உபரிநீர் கால்வாய் பணி அமைச்சர் துவக்கிவைப்பு

உபரிநீர் கால்வாய் பணி அமைச்சர் துவக்கிவைப்பு

சேலம் :சேலம், மூக்கனேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், திருமணிமுத்தாற்றை அடைய, கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து, பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கால்வாய் பணிக்கு, 11.07 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி கால்வாய் நீளம், 1,356 மீட்டர், மூடிய கால்வாய் நீளம், 238 மீட்டர், கால்வாய் உயரம், 2.20 மீட்டர்; அகலம், 2.80 மீட்டர் என்ற அளவில் பணி செய்யப்படும். மொத்தம், 10 பாலங்கள், 85.65 மீட்டர் அளவில் அமைக்கப்படுகின்றன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை