உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்களுக்கு சீரான குடிநீர்; அமைச்சர் அறிவுறுத்தல்

மக்களுக்கு சீரான குடிநீர்; அமைச்சர் அறிவுறுத்தல்

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டப்பணி முன்னேற்றம் குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: கோடை காலம் தொடங்கிய நிலையில், குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து, அலுவலர்கள் பணிபுரிய வேண்டும். மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை தொடர்ந்து கண்காணிப்பதோடு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிகளில் மக்கள் கூடும் இடம், தெருக்களில் குப்பை சேராதபடி, துாய்மைப்பணியாளர்கள் மூலம் தினமும் அகற்றப்பட வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளை, தொடர்புடைய அலுவலர்கள் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு குறிப்பிட்ட கால அளவில் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை