உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குண்டூர் வழியே மாற்று சாலை மக்களிடம் அமைச்சர் நம்பிக்கை

குண்டூர் வழியே மாற்று சாலை மக்களிடம் அமைச்சர் நம்பிக்கை

ஏற்காடு, டிச. 15-சேலத்தில் இருந்து ஏற்காடு செல்வதற்கு, கொண்டப்பநாயக்கன்பட்டி வழியே மலைப்பாதை உள்ளது. இச்சாலை ஏற்காடு வர முக்கிய பிரதான சாலையாகவும் உள்ளது. இதனால் சுற்றுலா பயணியர் அதிகளவில் வரும்போது, இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்பட்டால், மலைப்பாதையில் செல்ல மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.இதை தவிர்க்க ஏற்காடு மக்கள், மாற்றுப்பாதையாக குண்டூர் வழியே சேலம், கன்னங்குறிச்சி வரை உள்ள மண் சாலையை, தார்ச்சாலையாக அமைத்துத்தர கோரிக்கை விடுத்தனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று, அந்த மண் சாலையை ஆய்வு செய்தார். பின், 'விரைவில் இச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, குண்டூர் மக்களிடம் தெரிவித்தார்.மேலும் சமீபத்தில் மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற குண்டூரை சேர்ந்த அனுஷ்காவுக்கு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை