நேரு கலையரங்கில் அமைச்சர் ஆய்வு
நேரு கலையரங்கில்அமைச்சர் ஆய்வுசேலம், அக். 19-நேரு கலையரங்கில், துணை முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.நேரு கலையரங்கில் நடக்கும் அரசு விழாவில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பதையொட்டி, முன்னேற்பாடு பணிகளை, நேற்று அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். விழா மேடை அலங்காரம், பார்வையாளர் இருக்கைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கலையரங்க பகுதியில் தார்சாலை அமைத்தல், வர்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை துரிதமாக முடிக்கவும், தேவையற்ற உபகரணங்களை கலையரங்கில் இருந்து அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் ரஞ்சித்சிங், போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபிநபு, துணை கமிஷனர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.