உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாதகாப்பட்டி உழவர் சந்தை 5ம் இடம் வெள்ளி விழாவில் அமைச்சர் தகவல்

தாதகாப்பட்டி உழவர் சந்தை 5ம் இடம் வெள்ளி விழாவில் அமைச்சர் தகவல்

சேலம், சேலம், தாதகாப்பட்டி உழவர் சந்தை தொடங்கி, 25 ஆண்டு நிறைவால், வெள்ளி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:விவசாயிகள் விளை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்று லாபம் ஈட்டும்படி, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. தாதகாப்பட்டி உழவர் சந்தை, 2000ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது சேலம் மாவட்டத்தின், 13 உழவர் சந்தைகளுடன் மாநிலத்தில் அதிக உழவர் சந்தைகள் உள்ள மாவட்டம் எனும் பெருமையை பெற்றுள்ளது.மேலும் காய்கறி விற்பனையில் மாநில அளவில் சேலம், சூரமங்கலம் உழவர் சந்தை, 4ம் இடம், தாதகாப்பட்டி உழவர் சந்தை, 5ம் இடம் பிடித்துள்ளது. 90 கடைகளுடன் தொடங்கிய இச்சந்தையில் தற்போது, 170 கடைகள், 650 விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும், 45 முதல், 55 டன் காய்கறி விற்கப்படுகிறது. அனைத்து உழவர் சந்தைகளிலும் விவசாயிகளுக்கு எடை தராசுகள், மின் இணைப்பு, குடிநீர், கழிப்பிடம், குளிர்பதன கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், 6.30 லட்சம் ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை