உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செந்தில் பப்ளிக் பள்ளி மாணவருக்கு விருது வழங்கி அமைச்சர்கள் பாராட்டு

செந்தில் பப்ளிக் பள்ளி மாணவருக்கு விருது வழங்கி அமைச்சர்கள் பாராட்டு

சேலம் :தமிழ் வளர்ச்சி, செய்தி தொடர்புத்துறை சார்பில், 'என் பள்ளி என் பெருமை' தலைப்பில் மாநில அளவில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அதில் சிறியோர் பிரிவில், சேலம், செந்தில் பப்ளிக் பள்ளி, 4ம் வகுப்பு மாணவர் க்ரிவன் குமார், சிறந்த ஓவிய விருதை பெற்றார். அவருக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், தமிழ் வளர்ச்சி, செய்தித்தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன், கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் இணைந்து, விருது வழங்கி பாராட்டினர். விருது பெற்ற மாணவரை, செந்தில் குழும தலைவர் செந்தில் சி.கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செயலர் தனசேகர், தாளாளர் தீப்தி, தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரேசன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி, நிர்வாக அதிகாரி பிரவீன்குமார், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும் அவரது திறமையை ஊக்குவித்த பெற்றோர், ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை