எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா:மணமக்களுக்கு இ.பி.எஸ்., வாழ்த்து
சேலம்;அ.தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன் - வனிதாமணி தம்பதியின் மகன் செந்தில்வேலன். இவருக்கும், அரிசிபாளையம் அசோக்லால் - ரத்னா தம்பதியின் மகள் மதுவுக்கும், திருவாக்கவுண்டனுார் வரலட்சுமி மகாலில், இன்று காலை, 6:00 முதல், 7:30 மணிக்குள் திருமணம் நடக்கிறது.முன்னதாக நேற்று மாலை, 6:00 மணிக்கு, திருமண வரவேற்பு விழா நடந்தது. அங்கு இரவு, 7:36 மணிக்கு வந்த, அ.தி.முக., பொதுச்செயலர், இ.பி.எஸ்., பூச்செண்டு கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். அவரிடம், மணமக்கள் ஆசிர்வாதம் பெற்றனர். தொடர்ந்து விருந்து சாப்பிட்ட பின், இ.பி.எஸ்., புறப்பட்டார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, செம்மலை, மாநகர் பொறுப்பாளர் சிங்காரம், மாநகர், மாவட்ட செயலர் பாலு, புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் மணி, ராஜமுத்து, ஜெயசங்கரன், நல்லதம்பி, முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாஜலம், ரவிச்சந்திரன், செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், வணிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றனர்.