மேலும் செய்திகள்
ராசிபுரத்தில் பகலில் கொட்டி தீர்த்த மழை
17-Oct-2025
வாழப்பாடி, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் விட்டு விட்டு மிதமான வெயில் அடித்தது. நேற்று மதியம் 2:00 மணிக்கு, திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வாழப்பாடி, முத்தம்பட்டி, சிங்கிபுரம், காரிப்பட்டி, ஏத்தாப்பூர், மேட்டுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.* ஓமலுாரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டு, மழை விட்டு விட்டு பெய்தது. பஸ்நிலையம், கடைவீதி பகுதியில் மழை நீர் சாலையில் ஓடியது. இதனால், தீபாவளி பண்டிகை நாளான பட்டாசு கடைகளில் வியாபாரமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதே போல் காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, தொளசம்பட்டி ஆகிய பகுதியில் லேசான மழை பெய்தது.
17-Oct-2025