உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜோதிடர் மண்டையை உடைத்து பணம் பறிப்பு

ஜோதிடர் மண்டையை உடைத்து பணம் பறிப்பு

ஆத்துார்:மதுரை, சத்யமூர்த்தி நகரை சேர்ந்த, ஜோதிடம் தொழில் செய்யும், 20 பேர், தலைவாசலில் தங்கியுள்ளனர். அதில் நேற்று வீராங்கன், 45, என்பவர், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டலில் உணவு வாங்கச்சென்றார். அப்போது, 4 பேர், பணம் கேட்டு தகராறு செய்தனர். தொடர்ந்து வீராங்கன் மண்டையை உடைத்து, அவரது பாக்கெட்டில் இருந்த பணம், சில்லரை காசுகளை எடுத்துச்சென்றனர். காயம் அடைந்த அவர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆத்துார் டவுன் போலீசார், 4 பேரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி