உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 கடைகளில் பணம் திருட்டு

2 கடைகளில் பணம் திருட்டு

2 கடைகளில் பணம் திருட்டுஆத்துார்: ஆத்துார் அருகே மல்லியக்கரை, கோபால புரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 50. இவரது வணிக வளாக கட்டடத்தில், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், 26, மளிகை கடையும், செங்கதிர், 24, என்பவர் மெடிக்கலும் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, கடைகளை பூட்டிச்சென்றனர். நேற்று காலை, கடைகளின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, மளிகை கடையில், 20,000 ரூபாய், மொபைல் போன், மெடிக்கலில், 5,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இருவரும் அளித்த புகார்படி, மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை