மொபட், ரூ.35,000 திருட்டு
மேட்டூர்: மேச்சேரி, வவ்வால் தோப்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 46. இவர், மேச்சேரி, 4 ரோடு, ஆஞ்சநேயர் கோவில் அருகே எலக்ட்ரிக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 35,000 ரூபாயை திருடிச்சென்றனர். அதேபோல், எம்.காளிப்பட்டி, முனியப்பன் கோவில் அருகே வாடகை வீட்டில் வசிக்கும், ஈரோடு, சித்தார், கேசரிமங்கலத்தை சேர்ந்த மனுஷ்நந்தன், 28, வீடு முன் நிறுத்தியிருந்த, 'ஆக்டீவா' மொபட்டும் திருடுபோனது. இதுகுறித்து மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.