உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே நடந்த கொடூரம்

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே நடந்த கொடூரம்

ஆத்தூர்: தாய் கண் முன்னே சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரும், இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாரும் 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவர், அரசு பள்ளி ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த, லாரி டிரைவர் குமரேசன், 50, என்பவர், தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hc0ifvuo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து மாணவி, தனது வகுப்பு ஆசிரியையிடம், தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு மாணவியின் தந்தையை வரவழைத்த ஆசிரியை, சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை, குழந்தைகள் உதவி மையத்தில் புகார் கூறினார். அதனடிப்படையில், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார், விசாரணையை துவங்கினர். இந்த விசாரணையில், லாரி டிரைவர் குமரேசனுக்கு, சிறுமியின் தாயாருடன் பழக்கம் இருந்துள்ளது. கடந்த, பிப்., 17ம் தேதி, வீட்டில் இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி குமரேசன் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். பிப்., 20 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில், சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு சிறுமியின் தாயாரும், டிரைவர் குமரேசனுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, ஆத்தூர் மகளிர் போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்த, லாரி டிரைவர் குமரேசன், 50, சிறுமியின் தாயார் ஆகியோர் மீது, 'போக்சோ' மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Varuvel Devadas
மார் 07, 2025 12:15

This kind of inhuman activity should be mercilessly stopped by the court of law. Further, the cases should be over within three months, and the criminals should be punished in public. The Government should enact very strict laws for controlling these kinds of menance.


Kanns
மார் 07, 2025 11:16

PEOPLE DONT BELIEVE THEIR VESTED STORIES


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 07, 2025 09:52

நாளுக்கு நாள் போக்சோ செய்திகள் விதமாக வருகிறது. அரசு இதனை தடுக்க அனைத்து கட்சி கூட்டம் அனைத்து மதத்தலைவர்கள் கூட்டம் சமூக ஆர்வலர்கள் கூட்டம் நடத்தி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். அதை விடுத்து விட்டு போலீஸ்காரர்களை மூன்று மணிநேரம் வெயிலில் நிறுத்தி பணி செய்யும் அதிகாரிகளுக்கு கஷ்டத்தை கொடுத்து கொண்டு உள்ளது.


Anantharaman Srinivasan
மார் 07, 2025 00:11

மகளை கூட்டி கொடுக்க முயன்றவள் தாயா அவள் ? பேய். வாழ்நாள் சிறை தண்டனை தர வேண்டும்.


Imti
மார் 06, 2025 23:09

Pls blurr the image of the kid.


PRS
மார் 06, 2025 22:18

மிருகங்களை கேவலபடுத்த வேண்டாம். அவைகளுக்கு நன்றி உண்டு. இந்த ஈனபிறவிகளை சென்டினல் தீவிற்கு கடத்த வேண்டும்.


தமிழன்
மார் 06, 2025 22:07

இந்த கேடுகெட்ட ஈனப்பிறவிகளுக்கு தின்பதற்கு தினமும் மனித ம...ம் மட்டுமே தரப்பட வேண்டும் அந்த எச்ச நாயின் மர்ம உறுப்பை பொது வெளியில் மக்கள் முன்பு வெட்டி எறிய வேண்டும் இவளுக்கு கூடவே தபாயில் கொடுப்பது போல 500 சவுக்கடியை மக்கள் முன்பு பொதுவெளியில் கொடுக்க வேண்டும்


Kasimani Baskaran
மார் 06, 2025 21:58

இது போல சிறுமிகளின் வாழ்வை சீரழிப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.


naranam
மார் 06, 2025 20:05

இவர்களை உடனுக்குடன் கொன்று விடுவதே நல்லது.


சோழநாடன்
மார் 06, 2025 20:03

தந்தை மகளைப் பாலியல் உறவு கொள்ள தாய் உடந்தை என்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது நெஞ்சைப் பிழக்கும் வேதனையான செய்தி