உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகன் சாவில் சந்தேகம் போலீசாரிடம் தாய் மனு

மகன் சாவில் சந்தேகம் போலீசாரிடம் தாய் மனு

ஏற்காடு, ஏற்காடு கும்பிப்பாடி கிராமத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளி சுப்ரமணி, 38. இவர், நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தாய் புஷ்பராணிக்கு, சுப்ரமணி மனைவி சந்திரபாபு தகவல் கொடுத்துள்ளார்.சம்பவ இடத்திற்கு சென்ற புஷ்பராணி, சுப்ரமணி உடலை பார்த்த பின், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், தனது மகன் சுப்ரமணியின் மனைவி சந்திராபாபுவுக்கும், ஏற்காட்டில் உள்ள மற்றொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. ஊர் பெரியவர்களை வைத்து கண்டித்து பேசி முடித்து வைக்கப்பட்டது. பின்னர் மகன், சந்திராபாபு சேர்ந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார் என்று சந்திராபாபு கூறுகிறார். எனவே என் மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது. உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, ஏற்காடு போலீசார் சுப்பிரமணி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை