பல்வேறு திட்டப்பணி எம்.பி., துவக்கிவைப்பு
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சியில், 3, 15, 16 உள்பட, 7 வார்டுகளில், சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளுக்கு, கலைஞர் நகர்-புற மேம்பாடு, நகர்புற சாலை மேம்பாடு உள்பட, 6 திட்டங்-களில், 4.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நேற்று அப்பணி-களை, தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி, அந்தந்த வார்டுகளில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் தனம் உள்ளிட்ட கவுன்-சிலர்கள், கமிஷனர் பவித்ரா(பொ), மேற்கு ஒன்றிய செயலர் பால-கிருஷ்ணன் உள்ளிட்ட, தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.எம்.பி.,யிடம் கோரிக்கைஇதனிடையே சங்ககிரி சாலையில், எம்.பி., செல்வகணபதி வந்-தபோது, 1வது வார்டு, பா.ம.க., கவுன்சிலர் பழனிசாமி, 'என் வார்டுக்கு ஒதுக்கிய பொது நிதியில் தெரு விளக்கு அமைக்க கேட்டு, 3 மாதங்கள் ஆகியும் பணி நடக்கவில்லை' என, கோரிக்கை வைத்தார். அதற்கு அவர், கமிஷனரிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.