வழிப்பறியில் ஈடுபட்ட கொலை குற்றவாளி கைது
வாழப்பாடி:வழிப்பறியில் ஈடுபட்ட கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.அயோத்தியாப்பட்டணம் அடுத்த பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 45. இவர் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு பைக்கில் சேலம் நோக்கி, அயோத்தியாப்பட்டணம் அடுத்த 7வது மைல் அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, வீராணம் அடுத்த வலசையூர் பகுதியை சேர்ந்த பட்டறை சரவணன் கொலை வழக்கின் குற்றவாளியான மோகன், 42. கத்தியை காட்டி மிரட்டி 1,000 ரூபாயை பறித்து சென்றார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று மோகனை கைது செய்து, அவரிடம் இருந்த, 1,000 ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.