மேலும் செய்திகள்
ஜெய் நரசிம்மா... மே 11,2025 நரசிம்ம ஜெயந்தி
11-May-2025
நங்கவள்ளி: நங்கவள்ளியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. லட்சுமி நரசிம்மர் சுதர்சன ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் தீர்த்த பிரசாதம், அன்ன-தானம் வழங்கப்பட்டன. மாலையில் மூலவருக்கு தீபாராதனை நடந்தது. இரவு கருட வாகனத்தில் நரசிம்மர் திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதேபோல் கருப்பூர் இஸ்கான் கோவிலில் நரசிம்ம சதுர்த்தி விழா நடந்தது. பஜனை, அபிஷேகத்துக்கு பின், 'நரசிம்ம கதா' தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
11-May-2025