ஓமலுார் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்ட இயக்குனர் ஆய்வு
ஓமலுார், சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கடந்த மூன்று நாட்களாக, தேசிய சுகாதார திட்ட மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர். நேற்று காலை, 7:30 மணிக்கு ஓமலுார் அரசு மருத்துவமனையில், தேசிய சுகாதார திட்ட இயக்குனர் அருண்தம்புராஜ் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர்.வார்டு வாரியாக ஆய்வு செய்த போது, பொது வார்டில் இருந்த காசநோய் பதிப்புக்குள்ளான நபரை, தனி வார்டுக்கு மாற்றம் செய்ய அறிவுறுத்தினர். வளாகத்தில் உள்ள துாய்மை, கட்டடம் பராமரிப்பு, மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்தார். ஒன்றரை மணி நேரம் ஆய்வுக்கு பின், வேறு மருத்துவமனைக்கு குழுவினர் புறப்பட்டு சென்றனர்.சாலை விபத்தில் பலியான குரங்குஇளம்பிள்ளை, அக். 10இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர்கோயில் மலை தொடரில், ஏராளமான குரங்குகள் வசிக்கின்றன. போதிய உணவு இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை பறித்து சென்று விடுகின்றன. மேலும் உணவு தேடி குடியிருப்புகளுக்கு படையெடுக்கின்றன. அவ்வாறு செல்லும் போது, சேலம் - இளம்பிள்ளை பிரதான சாலையை கடந்து செல்கின்றன.இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணியளவில் ஒரு குரங்கு உணவை தேடி அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்வதற்காக, பிரதான சாலையை கடக்க முயன்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் சிக்கி தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியானது. உடனே பொதுமக்கள் இறந்த குரங்கிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு செய்து மலையடிவாரத்தில் புதைத்தனர். குரங்குகள் அடிக்கடி விபத்தில் சிக்கி பலியாவது வாடிக்கையாக உள்ளது. எனவே, வனத்துறையினர் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.