உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை

காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை

சேலம்,சேலம், அல்லிக்குட்டையை சேர்ந்தவர் ஜீவா, 23. தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் தீபிகா, 20. இருவரும் காதலித்து, 7 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.கடந்த ஏப்., 24ல் வீட்டில் தனியே இருந்த தீபிகா, விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் உயிரிழந்தார். வீராணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில், காதல் திருமணத்துக்கு பின் தீபிகா, அவரது பெற்றோருடன் பேச முயன்றுள்ளார்.அவர்கள் மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் திருமணமாகி, 7 மாதங்கள் மட்டுமே ஆனதால், தீபிகாவின் தற்கொலை குறித்து, சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை