முதல்முறை மினி பஸ் இயக்கம் நெய்யமலை மக்கள் மகிழ்ச்சி
ஆத்துார்: முதல்முறையாக நெய்யமலைக்கு மினி பஸ் இயக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பஸ் வசதி இல்லாத கிராம பகுதிகளை, நகர் பகுதிகளுடன் இணைக்கும்படி, புது வழித்தடங்களை கண்டறிந்து மினி பஸ் இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆத்துார், கெங்க-வல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி தாலுகா பகுதிகளில், 22 தடங்கள் கண்டறியப்பட்டன.அதில் மினி பஸ் இயக்க, தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்-டது. அதன்படி, ஆத்துார் நகராட்சிக்கு உட்பட்ட உப்பு ஓடை, சிலோன் காலனி, சந்தனகிரியில் இருந்து, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று மினி பஸ் இயக்கப்பட்டது. அதேபோல் தும்பலில் இருந்து நெய்யமலைக்கு மினி பஸ் முதன்-முதலாக நேற்று இயக்கப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்-தனர்.இதுகுறித்து ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோ-தரன் கூறுகையில், ''22 புது தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்-டுள்ளது. ஏற்கனவே இயக்கப்பட்ட, 9 மினி பஸ்களின் தடம் நீட்-டிக்கப்பட்டுள்ளது. புது தடத்தில், 3 பஸ்கள் இயக்கப்பட்டுள்-ளது. மீதி இடங்களில், புது பஸ்களை வாங்கி இயக்குவதாக, அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முதல்முறையாக நெய்யமலைக்கு மினி பஸ் இயக்கப்பட்டதால், மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்,'' என்றார்.