உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர், கழிப்பறை இல்லை: சுற்றுலா பயணியர் அவதி

குடிநீர், கழிப்பறை இல்லை: சுற்றுலா பயணியர் அவதி

ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்-கின்றனர். அவர்கள் தவிர்க்க முடியாத இடமாக, அண்ணா பூங்கா உள்ளது. அந்த பூங்காவை, தோட்டக்கலை துறையினர் பராமரிக்-கின்றனர். அங்குள்ள மலர்களை ரசிக்க, தினமும் ஏராளமான சுற்-றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அங்கு கழிப்பறை சேதம் அடைந்ததால் இடித்துவிட்டு புதிதாக கட்டும் பணி கடந்த மே மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணியர் பயன்பாட்டுக்கு சிறு அளவில் தற்கா-லிக கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அதுவும் பூங்கா நிர்வாகத்தால் முறையான பராமரிப்பின்றி துர்-நாற்றம் வீசியதால் தற்போது பூட்டப்பட்டுள்ளது. இதனால் சுற்-றுலா பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் புதிதாக கட்டப்-பட்டு வரும் கழிப்பறை பணியும் மந்த கதியில் நடக்கிறது. இதுத-விர அங்குள்ள குடிநீர் குழாய்களில், முறையாக தண்ணீரும் வரு-வதில்லை.பூங்காவை சுற்றிப்பார்க்க ஒருவருக்கு, 40 ரூபாய் கட்டணம் வசூ-லிக்கப்படும் நிலையில், பூங்கா நிர்வாகத்தினர், குடிநீர், கழிப்-பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை