மேலும் செய்திகள்
கலந்தாய்வு கூட்டம்
14-Dec-2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீக-ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தா-தேவி முன்னிலை வகித்தார். அதற்கு தலைமை வகித்த, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷில்பா பிரபாகர் சதிஷ் கூறியதா-வது: சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்வது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் இணைந்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 1,346 மையங்-களில், திருத்தப்பணி நடக்கிறது. மாவட்ட தேர்தல் அலுவலர், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், 11 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 111 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 3,468 ஓட்-டுச்சாவடி நிலை அலுவலர்கள், 346 மேற்பார்-வையாளர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு முகாம் தொடர்பாக, விழிப்புணர்வு நடவ-டிக்கை, இதுவரை பெறப்பட்ட விண்ணப்ப படிவ எண்ணிக்கை, மேல் நடவடிக்கை, புது வாக்காளர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் உள்ளிட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. தகுதியான ஒரு வாக்கா-ளரின் பெயரும் பட்டியலில் விடுபடாமல் இடம்-பெறும்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
14-Dec-2025