உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராஜகணபதி கோவிலில் ரூ.13 லட்சம் காணிக்கை

ராஜகணபதி கோவிலில் ரூ.13 லட்சம் காணிக்கை

சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில் உள்ள காணிக்கை உண்டியல், சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து, இந்து சமய அறநிலைத்துறை தர்மபுரி மாவட்ட உதவி கமிஷனர் மகாவிஷ்ணு முன்னிலையில், காணிக்கை எண்ணும் பணியில், கோவில் உதவி கமிஷனர் அம்சா உள்ளிட்ட பணியாளர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.அதில், 13,66,686 ரூபாய், 9 கிராம் தங்கம், 49 கிராம் வெள்ளி, 10 அமெரிக்க டாலர் இருந்தன. முன்னதாக கடந்த மார்ச், 20ல் உண்டியல் திறக்கப்பட்டதில், 7.33 லட்சம் ரூபாய் இருந்தது. தற்போது இரு மடங்கு காணிக்கை கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ