உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியில் வண்டல் மண் அள்ள அதிகாரிகள் வசூல்; குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு

ஏரியில் வண்டல் மண் அள்ள அதிகாரிகள் வசூல்; குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:தாதம்பட்டி செந்தில்: மாநகர் எல்லை விவசாயிகள், பிரதமர் கவுரவ நிதியுதவி பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்க பலமுறை முயன்றும் முடியவில்லை. சேலம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் முறையிட்டால் சென்னைக்கு கடிதம் அனுப்பி-யுள்ளோம். அங்கிருந்து பதில் வந்ததும் தெரிவிப்பதாக ஓராண்-டாக போக்கு காட்டுகின்றனர்.கொட்டவாடி வெற்றிமணி: பெத்தநாயக்கன்பாளையம், பெரி-யேரியில் வண்டல்மண் அள்ள வண்டிக்கு ஏற்ப, தாலுகா அலுவ-லகத்தில் பணம் வசூலிக்கின்றனர். சார்வாய்புதுார் ஏரியில் வண்-டல்மண் அள்ள அனுமதியே இல்லை. அந்த ஏரியில் உள்ளூர் தாதாக்கள், பொக்லைன் மூலம், முறைகேடாக மண் அள்ளி விற்-கின்றனர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பாகல்பட்டி பெரியண்ணன்: முத்துநாயக்கன்பட்டி, பாகல்பட்டி, செல்லப்பிள்ளைகுட்டை, சிக்கம்பட்டி, ஆட்டுக்காரன்புதுார் பகு-திகளில் வறட்சியால் தட்டைப்பயிர், பாசிப்பயிறு, உளுந்து, கம்பு, சோளம், சாமை உள்ளிட்டவை முளைப்பு வந்த நிலையில் காய்ந்து கருகிவிட்டதால், கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காத நிலை உள்ளது. பயிறு வகைகளும் சாகுபடி இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய இழப்பீடு வேண்டும்.கூடமலை சின்னசாமி: கூடமலை அடுத்த தகரப்புதுாரில், 4,000க்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன. அங்கு, கால்நடை மருத்துவமனை இல்லாததால், 3 கி.மீ.,ல் உள்ள கூடலை அல்லது கொண்டையம்பள்ளிக்கு கால்நடைகளை அழைத்து செல்வதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. பகுதிநேர கால்நடை மருத்-துவமனை திறக்க நடவடிக்கை தேவை. கூடமலை ஏரியில் மண் அள்ள அனுமதிக்க வேண்டும்.தம்மம்பட்டி பாலதண்டாயுதபாணி: தம்மம்பட்டி- திருச்சி சாலை, மாரியம்மன் கோவில் அருகே, 7 ஏக்கரில் உள்ள நீரோ-டையில், 4 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்ற தொடர்ந்து போராடு-கிறோம். 2023ல் கலெக்டர், ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிக-ளுடன் ஆலோசித்து உத்தரவிட்டார். இதுவரை நடவடிக்கை இல்லை.இவ்வாறு அவர்கள் பேசினர்.கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்-படும் நடவடிக்கை குறித்து, 10 முதல், 15 நாட்களுக்குள் தபால் மூலம் பதில் அளிக்கப்படும். தீர்வு காணாத மனுக்கள் தொடர்-பாக, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும். கூட்டுறவு சங்-கங்கள், தனியார் விற்பனையகங்களில், போதிய அளவில் உரங்கள் இருப்பு உள்ளன. அவை நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பதை, அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். ஆடிப்பட்டத்-தையொட்டி மாவட்டத்தில், 172 டன் நெல் விதை, 24 டன் சிறு-தானிய விதை, 34 டன் பயிறு விதை, 47 டன் எண்ணெய் வித்-துகள், விற்பனைக்கு உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி