மேலும் செய்திகள்
தொடர் மழையால் மஞ்சள் வரத்து சரிவு
13-Aug-2025
பனமரத்துப்பட்டி :பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஹெக்டேரில் அரளி நடவு செய்யப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை அறுவடை செய்யப்படும் மொக்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சேலத்தில் கடந்த, 1ல், ஒரு கிலோ சாதா அரளி, 60 ரூபாய், மஞ்சள், செல்வரளி தலா, 150 ரூபாய்க்கு விற்றது. கடந்த, 2ல் சாதா, 160; மஞ்சள், செவ்வரளி தலா, 400; 3ல் சாதா அரளி, 240; மஞ்சள், செவ்வரளி தலா, 400; 4ல் சாதா அரளி, 70; மஞ்சள், செவ்வரளி தலா, 100 ரூபாய்க்கு விற்றது. நேற்று சாதா அரளி, 50, மஞ்சள், செவ்வரளி தலா, 80 ரூபாய்க்கு விற்பனையானது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 2, 3ல் அரளி விலை கிலோ, 400 ரூபாய் வரை உயர்ந்தது. நேற்று ஓணம் நிறைவால், அரளி விலை, 50 ரூபாயாக சரிந்தது.
13-Aug-2025