மேலும் செய்திகள்
சான்றிதழ் வழங்க லஞ்சம் தாசில்தார், டிரைவர் கைது
25-Sep-2025
இடைப்பாடி, அக். 9இடைப்பாடி புறவழிச்சாலையில், பா.ம.க.,வை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு தாபா உள்ளது. அங்கு அக்கட்சியை சேர்ந்த, சேலம் தெற்கு மாவட்ட துணை அமைப்பாளரான, இடைப்பாடியை சேர்ந்த தமிழரசன், 28, என்பவரும், அவரது நண்பரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அதேபோல், வெள்ளாண்டிவலசை சேர்ந்த பூவரசன், அவரது நண்பர்கள் முனீஷ் உள்ளிட்டோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இந்த இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்நிலையில் தமிழரசன் சாப்பிட்டுவிட்டு, இடைப்பாடி, க.புதுாரில் சென்று கொண்டிருந்தபோது, முனீஷ் உள்பட சிலர் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த தமிழரசன், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழரசன் புகார்படி, முனீஷ், 22, உள்பட, 4 பேர் மீது, இடைப்பாடி போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் சமாதானப்படுத்த வந்த பூவரசனை, கத்தியால் தமிழரசன் குத்தினார். காயம் அடைந்த பூவரசன், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழரசன் மீதும், போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
25-Sep-2025