உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீர வணக்க நாள் கூட்டம் நடத்த தி.மு.க.,வுக்கே தகுதி உண்டு

வீர வணக்க நாள் கூட்டம் நடத்த தி.மு.க.,வுக்கே தகுதி உண்டு

சேலம்: சேலத்தில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் அமைச்சர் வேலு பேசியதாவது:மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தும் தகுதி, உரிமை, தி.மு.க.,வுக்கு மட்டுமே உண்டு. 1986ல், இந்தி மொழி உத்தரவு நகலை எரித்த, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றிய, அ.தி.மு.க.,வுக்கு வீர வணக்கநாள் கூட்டம் நடத்த தகுதி உள்-ளதா? அது மக்களை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறது.ஐ.டி.ஐ., மத்திய பல்கலை., கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், பணியாளர் தேர்வாணையத்தில் பயிற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும். அதன் கடித போக்குவரத்தும் இந்தியில் தான் இருக்க வேண்டும் என, 2022ல், உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரைத்தார். அதை கண்டித்து, தமிழக சட்டசபையில் தீர்-மானம் நிறைவேற்றி அனுப்பியவர் முதல்வர் ஸ்டாலின். உலகில் மொழிக்கு உயிர் தியாகம் செய்த இளைஞர்கள், தமிழ-கத்தில் மட்டுமே. பிரதமர் மோடி, உலக அரங்கில் திருக்குறள் சொல்வது, தமிழுக்கு பெருமை தான். சொன்னால் மட்டும் போதுமா? திருக்குறள் எழுதப்பட்ட தமிழை ஆட்சி மொழி என சொல்ல கூடாதா? அதனால், தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''மத்திய அரசு, ஆதிக்க இந்தியை திணிக்கும் போதெல்லாம், அதை தமி-ழகம் தடுத்து வருகிறது. முதல்வராக ஸ்டாலின் இருக்கும் வரை, தமிழகத்தில் இந்தியை நுழைய விடமாட்டார். அதற்காக அரும்-பாடு படுகிறார். இந்தியையும், இந்தி திணிப்பாளர்களையும் ஓட, ஓட விரட்டுவார்,'' என்றார்.மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி, தி.மு.க., பேச்-சாளர் மதிவாணன், மாநில மாணவரணி துணை செயலர் தமிழ-ரசன், மாநகர் மாணவரணி அமைப்பாளர் மணிகண்டன், செவ்-வாய்ப்பேட்டை பகுதி செயலர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ