உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 12 உண்டியல்கள் திறப்பு ரூ.13 லட்சம் காணிக்கை

12 உண்டியல்கள் திறப்பு ரூ.13 லட்சம் காணிக்கை

சேலம், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், 9 உண்டியல்கள் உள்ளன. அக்கோவிலுக்கு உட்பட்ட, கடைவீதி ராஜகணபதி கோவிலில், 3 உண்டியல்கள் உள்ளன. இவை அனைத்தும் நேற்று, இந்து சமய அறநிலையத்துறை, சேலம் மாவட்ட உதவி கமிஷனர் ராஜா, கோவில் உதவி கமிஷனர் அம்சா, அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா முன்னிலையில் திறக்கப்பட்டன.கல்லுாரி மாணவ, மாணவியர், பக்தர்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். சுகவனேஸ்வரர் கோவில் உண்டியல்களில், 8.29 லட்சம் ரூபாய், 20.5 கிராம் தங்கம், 105 கிராம் வெள்ளியும், ராஜகணபதி கோவில் உண்டியல்களில், 5 லட்சம் ரூபாய், 80 கிராம் வெள்ளி, 4.3 கிராம் தங்கமும் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை