உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு நீதிமன்றம் திறந்து வைப்பு

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு நீதிமன்றம் திறந்து வைப்பு

ஆத்துார் : ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், விரைவு நீதிமன்றம் திறக்கப்பட்டது.ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், 1901ல், கட்டப்பட்ட பழைய கட்டடத்தில், ஆத்துார் விரைவு நீதிமன்றம் செயல்பட்டு வந்தது.இந்த கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், மழை காலத்தில் மழை நீர் கசிந்து வந்ததுடன், பாதுகாப்பற்ற நிலையும் இருந்தது. இந்த விரைவு நீதிமன்றம், ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றம் செய்து, நீதித்துறை உத்தரவிட்டது.சேலம் மாவட்ட தலைமை நீதிபதி சுமதி உத்தரவுபடி, நேற்று ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், விரைவு நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஆத்துார் சார்பு நீதிபதி ஆனந்தன், மாஜிஸ்திரேட்கள் முனுசாமி, அருண்குமார், ஞானசம்மந்தம், வக்கீல் சங்க தலைவர் சிவக்குமார், மூத்த வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை