உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுகவனேஸ்வரர் கோவில் மண்டபம் திறப்பு

சுகவனேஸ்வரர் கோவில் மண்டபம் திறப்பு

சேலம், சேலம், சுகவனேஸ்வரர் கோவில் நந்தவன பின்புறம் உள்ள காலி இடத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 3.60 கோடி ரூபாய் மதிப்பில், இரு தளங்களுடன் திருமண மண்டபம் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் நேற்று, சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம், அந்த மண்டபத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து சேலத்தில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில், மேயர் ராமச்சந்திரன், ஆர்.டி.ஓ., அபிநயா, அறநிலையத்துறை இணை கமிஷனர் சபர்மதி, உதவி கமிஷனர் அம்சா, அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா உள்ளிட்டோர், குத்துவிளக்கு ஏற்றி, பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர். தரைத்தளத்தில் சமையல் கூடம், உணவு அருந்துமிடம், மேல் தளத்தில் மண்டபம் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ