ஜெர்மன் மொழி தேர்வுக்கு பயிற்சி எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு வாய்ப்பு
சேலம் :சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெற, ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருக்க வேண்டும். பி.எஸ்சி., நர்சிங், பொது நர்சிங், மருத்துவச்சி டிப்ளமோ, பி.இ., பிரிவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணு பொறியியல், பி.டெக்., தகவல் தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். வயது, 21 முதல் 35 வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருவாய், 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலம், 9 மாதங்கள். விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவின தொகையை, தாட்கோ வழங்கும். பயிற்சி முடித்த பின், தகுதியான நபர்களை பயிற்சி நிறுவனம் மூலம் தேர்வு செய்து, அந்நிறுவனம் சார்பில், ஜெர்மன் நாட்டில் பணிபுரியவும், ஆரம்ப கால மாத ஊதியம், 2.50 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். பயிற்சியில் சேர, www.tahdco.comஎன்ற தாட்கோ இணையத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.