உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எருமாபாளையத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

எருமாபாளையத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

சேலம்: சேலம் எருமாபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவரும், அ.தி.மு.க., பிரமுகருமான செங்கோடன், 67, தலைமையில், மக்கள் ஒரு சேர திரண்டு நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்:சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எருமாபாளையம் ஊராட்சியில், 11,000 பேர் வசிக்கின்றனர். அவர்களில், 75 சதவீதம் பேர் கூலி தொழிலாளிகள். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வசிப்பிடத்தை, சேலம் மாநகராட்சியுடன் இணைத்திருப்-பது, அந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்துள்-ளது. எருமாபாளையத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதால், வீட்டுவரி, குடிநீர் வரி உள்ளிட்டவை உயரும். 100 நாள் வேலை அறவே தடைப்பட்டு, அதை நம்பியுள்ள பல குடும்பங்கள் வருவாய் இழந்து சிரமத்துக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக விலைவாசி உயர்வு, மேலும் அதிகரிக்கும்.கல்குவாரி மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் இழப்பு ஏற்-படும் என்பதால், மாநகராட்சியுடன், எருமாபாளையத்தை இணைக்க வேண்டாம். அதற்கான தீர்மானமும் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மக்களின் தேவையறிந்து, ஊராட்சியை இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ