உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வட மாநிலத்தவர் அடையாள அட்டை சரி பார்க்க உத்தரவு

வட மாநிலத்தவர் அடையாள அட்டை சரி பார்க்க உத்தரவு

சேலம், ரெடிமேட் தொழிற்சாலைகளில், பணிபுரிபவர்களின் அடையாள அட்டையை சரி பார்க்க, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வங்காள தேசத்தினர், தெற்கு அசாமின் கரீம் கஞ்ச் மாவட்டம் மற்றும் மேற்கு அசாமின் தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டங்களின் வழியே இந்தியாவுக்குள் நுழைகின்றனர் எனவும், தமிழக ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிவதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.இப்படி நுழையும் வங்காள தேசத்தினர், தங்களை வட மாநிலத்தவர்களாக அடையாளப்படுத்தி கொண்டு, சட்டத்துக்கு புறம்பாக, தமிழகத்தில் தங்கக்கூடிய சாத்தியகூறுகள் உள்ளன. தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் அடையாள அட்டையை இருமுறை சரிபார்த்து, உறுதி செய்து அந்த விபரங்களை உடனடியாக, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தை 95973 86807 என்ற எண்ணிலும், gmail.comஎன்ற இ-மெயிலிலும் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி