உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோல்பிளே நடத்த உத்தரவு

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோல்பிளே நடத்த உத்தரவு

சேலம், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை கல்வி திட்டத்தில், வளரிளம் பருவ கல்வி வழங்கப்படுகிறது. அதில், 9ம் வகுப்பு முதல், மாணவ, மாணவியருக்கு, ஆரோக்கியம், தன் சுத்தம், மன நல பாதிப்பு, பாலின சந்தேகங்கள், போதை பொருள் தடுப்பு, சைபர் கிரைம் செயல்பாடு உள்பட, பல்வேறு தலைப்புகளில், விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் மாணவ, மாணவியரை மேலும் ஊக்கப்படுத்த, மாவட்ட, மாநில, தேசிய அளவில், பங்கேற்று நடித்தல் எனும், 'ரோல்பிளே' போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அதில் நடிப்பதற்கான சூழ்நிலைகள், தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 9ம் வகுப்பு மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய, 19 மாவட்டங்களில் மட்டும் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட அளவில் போட்டிகள், நவ., 3, மாநில போட்டிகள், நவ., 11ல் நடக்க உள்ளன. வெற்றி பெறுவோர், ஜனவரியில் நடக்கும் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். மாவட்ட போட்டிகளை நடத்த, மாவட்டத்துக்கு, 1.79 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ