அரசு பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்றல் நிலைகளை ஆய்வு செய்ய உத்தரவு
அரசு பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்றல் நிலைகளை ஆய்வு செய்ய உத்தரவுசேலம், நவ. 19-தமிழக அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 3 ம் வகுப்பு வரை, எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்புக்குள், மாணவர்களுக்கு எண்களையும், எழுத்துக்களையும் பயன்படுத்த கற்றுக்கொடுக்கும் நோக்கில், கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், மாணவர்களிடையே கற்றலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கண்டறிய, கற்றல் நிலைகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்துக்கு, 135 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, 1,620 மாணவர்களிடம் கற்றல் நிலைகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பி.எட்., படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பயிற்சியளித்து, டிச., 2 முதல், 13 தேதிக்குள் இப்பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.