உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆணைவாரியில் குளிக்க இரண்டாம் நாளாக தடை

ஆணைவாரியில் குளிக்க இரண்டாம் நாளாக தடை

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், முட்டலில் உள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சி, கல்வராயன்மலை பகுதியில் உள்ளது. சில நாட்களாக பெய்த மழையால் நேற்று (நவ.,4) ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியதால், சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கல்வராயன்மலையில் தொடர் மழையால் இன்றும் (நவ.,5) ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது. தவிர, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள, இரு ஓடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் ஆணைவாரிக்கு செல்லவும், குளிக்கவும், இரண்டாவது நாளாக வனத்துறையினர் தடை விதித்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ