விபத்தில் மா.செ., பலி உடல் உறுப்புகள் தானம்
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி, சிங்கிபுரத்தை சேர்ந்தவர் பாண்-டியன், 54. வன்னியர் சங்கத்தின், சேலம் வடக்கு மாவட்ட செய-லரான இவர், கடந்த, 9ல் அதே பகுதியில் தம்மம்பட்டி நெடுஞ்-சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, மேற்குரா-ஜாபாளையத்தை சேர்ந்த தினேஷ், 27, ஓட்டிவந்த, 'பல்சர்' பைக், பாண்டியன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாண்-டியன், தினேஷ் ஆகியோரை, மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் நேற்று, பாண்-டியன் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வ-தாக, உறவினர்கள் தெரிவித்தனர். இதனால், அதற்கான பணி, சேலம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. தினேஷ், மேல் சிகிச்சைக்கு, கோவையில் உள்ள தனியார் மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்-றனர்.