உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கர்நாடகா மாநிலம் செல்லும் நெல் அறுவடை இயந்திரங்கள்

கர்நாடகா மாநிலம் செல்லும் நெல் அறுவடை இயந்திரங்கள்

மேட்டூர், கர்நாடகாவில், 27 மாவட்டங்கள் உள்ளன. நடப்பாண்டு கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கியதால், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை, மைசூரு மாவட்டம் கபினி அணை மற்றும் ேஹரங்கி, ேஹமாவதி அணைகள் ஒரு மாதத்துக்கு முன்னதாக நிரம்பியது. அதற்கேற்ப நடப்பாண்டு கர்நாடகாவில் நெல் சாகுபடி முன்னதாக தொடங்கியது. 4 மாதங்களில் நெல் பயிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயாராகி விட்டன. இதனால், குடகு, மைசூரு, மாண்டியா, ஷிமோகா, தாவணகெரே, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்கட்ட நெல் அறுவடை தொடங்கியுள்ளது. இதற்காக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, ஆத்துார் பகுதிகளில் இருந்து, சில நாட்களாக தினமும், 10 முதல், 25 நெல் அறுவடை இயந்திரங்கள், மேட்டூர், கொளத்துார், மைசூரு வழியே செல்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை